×

அமெரிக்க பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அகமத் உமர் விடுதலை: பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட்’ என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர் டேனியல் பேர்ல். கடந்த 2002ம் ஆண்டு பாகிஸ்தானில் செய்தி சேகரிப்பதற்காக வந்தபோது, தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அகமது உமர் ஷேக் சையீத் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து கடந்தாண்டு இவர்கள்  சிந்த் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில், அகமது உமரின் மரண தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையைாக குறைக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து டேனியல் பேர்ல் குடும்பத்தினர், சிந்த் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி முஷீர் அலாம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, முக்கிய குற்றவாளியான அகமத் உமரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Ahmed Omar ,US ,Supreme Court , Ahmed Omar acquitted in US journalist murder case Supreme Court order
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது